தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுமி தேசிய விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரசித்தி சிங் என்ற 7 வயது சிறுமி கடந்த இரண்டு வருடங்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழ மரக்கன்றுகளை நட்டு, 8 பழத்தோட்டங்களை உருவாக்கியுள்ளார். அதற்காக சமூக சேவைப் பிரிவில் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒரு லட்சம் மரங்களை நட வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த சிறுமி பயணித்து வருகிறார். பூமியில் பசுமையை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அந்த சிறுமி கூறியுள்ளார். இந்த சிறு வயதில் பூமியின் பசுமை காக்க இவ்வாறான முயற்சிகளைச் செய்து வரும் அந்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.