திமுக அரசுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் நேரில் சாட்சியம் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திமுக அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சித்திரவதை செய்துள்ளது. இதனால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கையை மனித உரிமை ஆணையம் எடுக்கும் என்று நம்புகின்றேன். அதிமுகவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துணைச் செயலாளர் பதவிக்கு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி கட்சி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று. விமர்சனத்திற்கு இல்லாத ஒன்று.
சபாநாயகருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். ஆனால் அதிமுகவில் அதிகாரம் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி தான். மற்றவர்கள் கடிதம் எல்லாம் அதிகாரம் இல்லாதவர்கள் எழுதியதாக தான் கருதப்படுகின்றது. சீரான மின்சாரம் வழங்குவதற்கு திமுகவிற்கு வக்கு இல்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு மின் கட்டணத்தை அதிகரிக்க சொன்னது. மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை குறைத்து விடுவோம் என கூறியுள்ளது. ஆனாலும் நாங்கள் மின்கட்டணத்தை உயர்த்த வில்லை. தமிழ்நாட்டு மக்கள் மின்சாதனங்களை உபயோகிக்க முடியாத அளவிற்கு திமுக அரசு தள்ளி இருக்கின்றது. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவு பெற்றுள்ளது. தனிநபர் வருமானம் பொருளாதார வளர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் எங்கள் ஆட்சியில் சலுகை கொடுத்து மின்சார கட்டணத்தையும் ஏற்றாமல் இருந்தோம். ஆனால் தற்பொழுது மின்சார கட்டணத்தை எகிரிவிட்டு மத்திய அரசின் மீது பழியை போட்டு தமிழகத்தை இருளுக்குள் தள்ளி இருக்கிறது. இது சரியான அரசா? திறமை இல்லாத அரசு இது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல ஏன் மாநில அரசு குறைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.