Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தை இரண்டாக பிரிப்பு… திமுக சொன்ன புதிய ட்விஸ்ட்…. அமைச்சர் சூளுரை …..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள கன்னிவாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி விளக்கேற்றி பேசினார். அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சி தொகுதிகள் மற்றும் எதிர்க்கட்சி தொகுதிகள் என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து பின் தங்கிய பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார் என்று கூறினார்.

இதையடுத்து தமிழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தை இரண்டாக பிரித்தாலும் இரண்டிலும் திமுக தான் ஆட்சி செய்யும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை இரண்டாக பிரிக்கப்படும் என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறு அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்பது நைனார் நாகேந்திரனின் ஆசையாக இருக்கலாம். அது ஒருபோதும் நடக்காது என்று அமைச்சர் சூளுரைத்துள்ளார்.

Categories

Tech |