Categories
மாநில செய்திகள்

தமிழகத்தையே திரும்பிப்பார்க்க செய்வோம்…. கமல்ஹாசன் சூளுரை…!!

மக்கள் நீதி மைய கட்சியில் சதிகாரர்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கட்டமைப்பின் துணைத் தலைவராக ஏஜி மவுரியா, களப்பணி துணைத்தலைவராக தங்கவேலு, தலைமை நிலைய மாநில செயலாளராக சரத் பாபு, நிர்வாக குழு உறுப்பினராக ஸ்ரீப்ரியா சேதுபதி, நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளராக நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு பேசிய கமல், நம்மை படகாக்கி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். தேர்தலில் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க செய்வோம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் சூளுரைத்தார்.

Categories

Tech |