தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயிரம் பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலணியில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தொழிலதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன்அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர்களை கார் ஓட்டுனர் கிருஷ்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டும் இன்றி சென்னை மாநகரையே உலுக்கியது. விமான நிலையத்திலிருந்து இருவரையும் அழைத்துச் சென்ற ஓட்டுநர் மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து இருவரையும் திடீரென தாக்கியுள்ளார். பின்னர் அவர்களை வீட்டில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
ஏற்கனவே வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் திருடி வைத்திருந்த ஓட்டுனர் கிருஷ்ணா அவரது நண்பருடன் சேர்ந்து தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர். அதன்படி இருவரையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரம்மாண்ட வீட்டில் பெரிய குழி தோண்டி புதைத்தனர். அதன்பிறகு கொள்ளையடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற இருவரும் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. கொலையாளிகள் இடமிருந்து ஆயிரம் பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எடை 9 கிலோவும், 60 லிருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன்பிறகு கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதைக்கப்பட்ட இருவரின் உடல்களையும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்த பிறகு எப்படி கொலை செய்யப்பட்டனர் என்று முழு விவரம் தெரியவரும்.