தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதில், சனாதனிகளின் அற்ப அரசியல். பெரியாருக்கு அடுத்து அண்ணாவையும் சீண்டுவது அவர்களின் வெட்க கேடான புத்தியின் இழிநிலை. இது திமுக, திக போன்ற இயக்கங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே விடப்பட்டுள்ள சவால். ஆட்சியிலுள்ள அதிமுக என்ன செய்யப்போகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
#அண்ணாசிலையில்_காவித்துணி. சனாதனிகளின் அற்ப அரசியல். பெரியாருக்கு அடுத்து அண்ணாவையும் சீண்டுவது அவர்களின் வெட்க கேடான புத்தியின் இழிநிலை. இது திமுக, திக போன்ற இயக்கங்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கே விடப்பட்டுள்ள சவால். ஆட்சியிலுள்ள அதிமுக என்ன செய்யப்போகிறது? @CMOTamilNadu pic.twitter.com/8rXG3aI1bw
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 30, 2020