கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்தும், மத்திய அரசு இந்த ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள நிதி குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒன்றிய அரசு தமிழகத்திற்கான புதிய ரயில் வழித்தட திட்டங்களை மீண்டும் புறக்கணித்துள்ளது. மேலும் 8 புதிய திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை போடிநாயக்கனுர் அகல ரயில் பாதை திட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
இதுகுறித்து பலமுறை முறையீடு செய்ததன் விளைவாக 104 கோடி நடப்பு ஆண்டில் ( 2021-22 ) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் ரூ.125 கோடி வரும் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும், தமிழக புதிய வழித்தட திட்டங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.