ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர்எஸ்எஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் முகாம்களும் ஷாக்காக்களும் இந்த மண்ணில் தொடர்ந்து நடைபெறும். கடந்த மாதம் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அதை தடை செய்ய முடியாது என்று செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி. சூர்யா தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி வந்துவிட்டால் என்னமோ ஆர்எஸ்எஸ் அமைப்பை தமிழகத்தில் தடை செய்து விடலாம் என்ற தொனியில் பேசுவது நகைப்பாக உள்ளது என விமர்சித்தார்.