Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள்… இடியுடன் கூடிய கனமழை… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சில மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜனவரி 11ஆம் தேதி வரை கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |