தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அதேசமயம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. புயல் கரையை கடந்தாலும் இன்னும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.