Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 சென்டிமீட்டர், நெய்வேலியில் 8 செ.மீட்டர்,  குறிஞ்சிப்பாடி, கடலூரில் தலா 7 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Categories

Tech |