Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம்…. 9 ஏஎஸ்பிகளுக்கு பணியிடம் ஒதுக்கீடு… அரசு அறிவிப்பு…!!!!

தமிழக காவல்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 உதவி காவல் கண்காணிப்பாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை போல 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து நேற்று வெளியிட்ட உத்தரவில், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மாதவன், சைபர் கிரைம் பிரிவு எஸ்பியாகவும், சைபர் கிரைம் பிரிவு எஸ்பி அசோக் குமார், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் புக்யா சினேகா பிரியா, மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்.பி.,யாகவும், திருப்பூர் துணை ஆணையர் பாஸ்கரன் – தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும், தேனி உத்தமபாளைம் உதவி எஸ்பி ஸ்ரேயா குப்தா, விளாத்திகுளம் உதவி எஸ்.பி.,யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஐபிஎஸ் பயிற்சி முடித்து தமிழக காவல்துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பணியிடங்கள் அய்மான் ஜமால்-ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர், எஸ்.பிருந்தா-கோவை மாவட்டம் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர், யாதவ் கிருஷ் அசோக்- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர், மது குமாரி-தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர், விவேகானந்தா சுக்லா- திருவள்ளுவர் உதவி காவல் கண்காணிப்பாளர், பல்வீர் சிங்- திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி கண்காணிப்பாளர், கராத்கருண்- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவி கண்காணிப்பாளர், ஆர்.ஸ்டாலின்- சிவகங்கை மாவட்ட காரைக்குடி உதவி கண்காணிப்பாளர், பி.ரகுபதி-கடலூர் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |