கடந்த 2013 ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் திருச்சியில் உள்ள சையத் முதர்ஷா பள்ளியில் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய நபர் சிலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிலும் குறிப்பாக தற்போது கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் படிப்பை நிறுத்தியுள்ளனர். இடைநிற்றலை குறைக்கும் வகையில் கணினி அறிவியல் பாடம் பயிலும் மாணவருக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான பட்டியலில் கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் இடம்பெறாமல் இருக்கின்றனர். அடுத்து வரும் காலங்களில் அவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற வேண்டும். தமிழகத்தில் இருந்து மாநகராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து வரும் கணினி பயிற்சி நிலை ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதிலும் முக்கியமாக 2013ம் ஆண்டு 652 கணினி பயிற்றுநர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தந்து பணியில் நியமிக்க வேண்டுமெனவும் இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.