தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் ஐடிஎல் இன்பிராஸ்டேக்சர் லிமிடெட் நிறுவனம் செல்போன் டவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 2017 ஆம் வருடத்தில் இருந்து செயல்படாத அந்த டவர் கண்காணிப்பில் இல்லாமல் இருந்தது.
இதனையடுத்து தற்போது அந்த டவர் திருடு போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையில் அங்குள்ள 600 செல்போன் டவர்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.