Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில்…. காவலர் அங்காடிகள் திறக்க…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் புதிதாக காவலர் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் காவலன் நலனுக்காக காவலர் அங்காடிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

அதன்படி டிஜிபி சைலேந்திரபாபு,காவலர் அங்காடி தொடங்குவதற்கு பொருத்தமான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு காவலர் அங்காடிகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் பொருட்டு புதிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவலர் அங்காடிகளுடன் ஒப்பந்தம் செய்ய விருப்பமுள்ள நிறுவனங்கள் http://www.tnpolicecanteen.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சரியான இணைப்புகளுடன் தபால் மூலம் காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |