தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிஐடியின் சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சிபி சிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணை குழு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஆயுதப்படை ஐஜியாக இருந்த கண்ணன் சென்னை வடக்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தாமஸ் மவுண்ட் துணை ஆணையராக இருந்த தீபக் சிவஜூம் சென்னை போக்குவரத்து இணை ஆணையராக சமய சிங் மீனாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!
