Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் 01-12-2022 வரை காரைக்கால், புதுச்சேரி, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02-12-2022 அன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையை  பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |