தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக காவல் துறையில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐஜியாக உதவி உயர்வு வழங்கி பணி இடங்களை ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பின் படி மத்திய மண்டல ஐஜியாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதோடு இணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீப் குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராகவும்,சுதாகர் மேற்கு மண்டல ஐஜியாகவும்,அயல் பணியில் இருக்கக்கூடிய அமித் குமார் சிங் மற்றும் அஷ்வின் எம்.கொட்னீஸ் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதே போல் பதவி உயர்வு பெற்று கார்த்திகேயன் கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு துணை ஆணையராகவும்,பிரபாகரன் பதவி உயர்வு பெற்று காவல்துறை விரிவாக்க துறை டி.ஐ.ஜியாகவும்,கயல்விழி திருச்சி ஆயுதப்படை பிரிவு டி.ஐஜி,சின்னசாமி கடலோர பாதுகாப்பு குழுமம் டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.அயல் பணியில் இருக்கக்கூடிய சரவணன்,சேவியர் தன்ராஜ்,அனில் குமார் கிரி ஆகிய மூவருக்கும் டி.ஐ.ஜி பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பணியில் தொடர்வார்கள்.தஞ்சாவூர் சரக டிஐஜியாக பர்வேஷ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார்.