Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 4000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஏற்கனவே 4000 துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் விரைவில் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |