தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட, தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து இடமாற்றம் செய்து வருகிறது. தற்போது வரை 70க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து ஏமாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலட்சுமி மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணைச் செயலாளராக நியமனம். செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலாளராக நியமனம்.
நாமக்கல் ஆட்சியராக இருந்த மேக்ராஜ் நகராட்சி நிர்வாக இணை இயக்குநராக நியமனம். திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம். திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம். கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் நிதி கூடுதல் செயலாளராக நியமனம் என மொத்தம் 39 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.