தமிழகத்தில் வருகின்ற 25 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 5 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கும்.
அதனால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்வதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வருகின்ற 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை வாட்டி வதைத்த நிலையில், இரண்டு நாட்களாக சற்று மழை குறைந்துள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.