தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வருகின்ற 25ஆம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரும். அதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை மற்றும் லேசான மழை பெய்யும்.
இதனையடுத்து வருகின்ற 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதிகளில் சூறாவளி காற்று 50 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.