Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 3ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனிடையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் இன்று (மார்ச்.1) வறண்ட வானிலையே நிலவும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால் நாளை (மார்ச்.2) தென் தமிழகம் கடலோரம் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்பின் நாளை மறுநாள் (மார்ச்3) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 4ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |