தமிழகத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் அறிக்கை ஒன்றை வெளியியிட்டுள்ளார். அதில், “04/02/2022 (இன்று) வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதையடுத்து ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
அதன்பின் 05/02/2022 நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 06/02/2022 வட கடலோர தமிழகம், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
07/02/2022, 08/02/2022 தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பின் காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டி மீட்டரில்) ஏதுமில்லை ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.