Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 25000 அரசு புதிய பணியிடங்கள்…. செம சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழக அரசில் ஆசிரியர்கள்,அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வுபெறும் வயது கடந்த 2020 ஆம் ஆண்டு 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான அரசாணையில் தமிழகத்தில் அரசு துறை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஓய்வு பெறும் வயது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தமிழக அரசும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இன்று 25 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஏற்கனவே 1,50,000காலி பணியிடங்கள் உள்ள நிலையில் மேலும் 25 ஆயிரம் இடங்கள் இன்று முதல் கூடுதலாக காலியாக உள்ளன.

இந்நிலையில் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றுடன் ஓய்வு பெற்றதால் தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு துறைகளில் 25 ஆயிரம் புதிய காலி பணியிடங்கள் உருவாகியுள்ளது. இந்த காலி பணியிடங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப படுவதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. எனவே பணிகளுக்கான தேர்வுகள் இளைஞர்கள் இப்போதிலிருந்தே தயாராகுவது நல்லது.

Categories

Tech |