மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அதாவது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மய நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தனியார் முதலீட்டை கொண்டு வருவதற்காகவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருக்கின்றனர். இந்த தனியார் மயமாக்க நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த வருடமும் அரசு ஊழியர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினார்கள்.
அதேப்போன்று இந்த வருடமும் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் போராட்டம் நடைபெற உள்ளதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை சம்பளம் கிடையாது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அரசு ஊழியர்களின் நாடு தழுவிய இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.