தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்குவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories
தமிழகத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!
