தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மது கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மறுநாள் அக்டோபர் 2ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.