Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது.

இருந்தாலும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

Categories

Tech |