தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 11ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வடி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும், மற்ற பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.