தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார்.
இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, 145 சமத்துவபுரங்கள் புதுப்பிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு வழங்குவதை குறைந்தபட்சம் 2004-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.