தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாககாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் எட்டாம் தேதி காலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் கரையை வந்தடையும்.
இதனால் டிசம்பர் எட்டாம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.