தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் ஒரு சில மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இடைவிடாத மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கரூர், நாமக்கல், திருச்சி, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.