Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்கள்… கட்டாயம் கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். வேலூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் பலத்த காற்று வீசும் என்ற காரணத்தால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |