Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன்படி தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டில் 10 முதல் 13 நாட்கள்மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் குறைக்கப்பட்ட பாடங்கள் போக மீதம் உள்ள பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல ஒன்றரை மாதம் கோடை விடுமுறை விடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |