Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான்”…. மக்களே கவனமா இருங்க…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டி அளித்தபோது தெரிவித்ததாவது: நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்தடைந்த 47 வயது மிக்க நபருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் ஆறு பேரையும் பரிசோதனை செய்த போது அவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்கு உள்ளான நபருடன் சேர்ந்து வந்த ராமப்புறத்தைச் சேர்ந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேருக்கும் எஸ் – ஜீன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை காங்கோவில் இருந்து வந்த ஆரணியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ‘எஸ்-ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து மொத்தம் 12 பேருக்கு இந்த அறிகுறி இருப்பதால் அவர்களின் மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தீவிர கண்காணிப்பு வளையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |