Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியிலும் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |