தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. அதனால் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வந்தது. இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டு கல்வியாண்டில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு தினசரி பாடங்கள் நேரடி முறையில் நடத்தப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பொது தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த மே மாதம் 5ஆம் தேதி 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த கல்வியாண்டு வழக்கம்போல் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தடை செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் தமிழகத்தில் 10, 12 மாணவர்களுக்கு மட்டுமே பொது தேர்வு நடத்தப்பட்டு வந்தது அதன் பிறகு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில கல்வி கொள்கை கூட்டத்தில் 11 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்ற தகவலை கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் மாநில கல்விக் கொள்கை கூட்டத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்தல் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.