Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியில் சேர விருப்பமா?…. இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு….!!!!

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் 4 மாவட்டங்களில் 4 தேதிகளில் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த முகாம்களின் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

108 ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம்

  • 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகள் காலியாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
  • இந்த பணிகளுக்கான இடங்களை நிரப்ப தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் முகாம்கள் நடைபெற இருக்கிறது.
  • மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் 4 தேதிகளில் நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் 14 தேதியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 தேதியும், தஞ்சை மாவட்டத்தில் 17, 18 தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளது.
  • விண்ணப்பிப்பவரின்  தகுதி தேர்வு முறை;
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் 12 மணி நேரம் இரவு, பகல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரிய தயாரானவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு விண்ணப்பதாரரின் தகுதியை அடிப்படையாக கொண்டு நேர்முக தேர்வின் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.வேலைவாய்ப்பு முகாம்களில் தேர்வு காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறும்.
  • முகாம்களில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர் தனது அனைத்து அசல் சான்றிதழ்களையும் முகாமுக்கு எடுத்து வர வேண்டும்.
  • முகாம் நடைபெறும் இடங்கள்;
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வளாகத்தில் நடைபெறும்.
  • மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வளாகத்தில் நடைபெறும்.
  • தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வளாகத்தில் நடைபெறும்.
  • இந்த முகாம்களில் கலந்து கொண்டு அனைவரும் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Categories

Tech |