தமிழகத்தில் 100 நாட்களில் 30 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் கார்டு இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. இது குறித்து மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்தப் பணி ஆறு மாதத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதே சமயம் 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும். 50 ஆயிரமாவது மின் இணைப்பு பெரும் விவசாயி முதல்வர் ஸ்டாலின் கையில் சான்றிதழை பெறுவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.