தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் நாட்களில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் எளிதில் இணையதளம் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவை செய்து முடிக்கலாம்.
அதாவது வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதள முகவரியின் மூலம் அல்லது அருகில் உள்ள இ சேவை மையம் மூலம் அல்லது மாணவர்கள் தங்கள் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்ற தேவையான அனைத்து ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக அரசினர் தொழிற்பெயர்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுரை வழிகாட்டு மையத்தில் சென்று வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.