திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மார்ச் 14ம் தேதிக்குள் வழங்கவேண்டுமென அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2 வருடங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை பெரிதும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
மேலும் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு நோய் தடுப்பு விதிமுறைகளை அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்ட நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.இதனை தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் மீண்டும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்ட நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வை பள்ளிகளில் வைத்து நேரடியாக நடத்த கல்வித்துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்த மாதம் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இத்தேர்வு சாதாரண தேர்வு என்றும் இந்த மதிப்பெண்ணை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து வருகிற மார்ச் 14 ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்குமாறு அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.