Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

அதனால் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு,தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |