தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், தர்மபுரி, தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.