தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அப்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வருடம் கட்டாயம் பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனிடையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது.
இதையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் வார கடைசி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை பொதுத்தேர்வு போன்று நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2ஆம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 தேதி வரை நடைபெற இருக்கிறது. அடுத்ததாக ஏப்ரல் கடைசி வாரத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பின் மே 1-ல் மே தினம் மற்றும் மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் வருவதால் அதற்கு முன் தேர்வை முடிக்கவும் திட்டமிடப்பட்ள்ளது. தமிழகம் மாணவர்கள் நீட், ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக மே மாதம் கோடை விடுமுறை வேண்டும். இதனால் ஏப்ரல் மாதத்தில் பொது தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.