Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 நாட்களில்…. கொரோனா படிப்படியாக குறையும்…. மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதனை மீறி செயல்படும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து 10 நாட்களில் கணிசமாக குறையும் என கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த செய்தி மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |