நாடு முழுவதும் மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை கைவிட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் மேல்நிலை கல்வியை பெறுவதற்காகவும், உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவி தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமில்லாமல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தேர்வினை அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். தற்போது இந்த தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இணையதளத்தில் தேசிய திறனாய்வுக்கான தற்காலிக விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் http://http//dge.tn.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். அதோடு மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். மேலும் அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 16-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்” என்று கூறியுள்ளது. இதனால் தேர்வர்கள் மத்தியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.