தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழில் ஜாதியை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாற்றுச் சான்றிதழில் ஜாதியைக் குறிப்பிடும் போது தவறுதலாக வேறு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மூலம் திருத்திக் கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது.
இதற்கு மாற்று சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது . இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாணவர்களும் அவர்களின் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களால் மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்டு இருந்தால் பள்ளி நிர்வாகம் மாற்றிக் கொடுப்பது வழக்கம். தற்போது இதுகுறித்து மாவட்ட பள்ளிக்கல்வித் துறை ஆணையர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழில் தவறுதலாக ஜாதி பெயர் எழுதி இருந்தால் அதனை பள்ளி நிர்வாகங்கள் மாற்றி கொடுக்க கூடாது. அத்துடன் தங்களின் ஜாதி சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பெயரை மாற்று சான்றிதழில் திருத்தம் செய்யும் படி கோரிக்கை வைத்தாலும் ஏற்க வேண்டாம் என்றும், மாற்று சான்றிதழ் தேவைப்படும் சமயத்தில் வருவாய் துறையின் சாதி சான்றிதழையும் அதனுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் மாணவர்களின் விவரங்களை சரியாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.