Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?…. வெளியான புதிய தகவல்….!!!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பள்ளிகளை திறக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது விஜயகாந்தை தொடர்ந்து அன்புமணியும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இன்று முதல் 1 -12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என்ற தமிழக அரசின் முடிவு பெற்றோர்களுக்கு அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்தலாம் என்றும் 1-9 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |