Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை….. ஆன்லைன் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஒன்றாக இணைந்து பாடம் பயிலும்போது காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என கருதி ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் மாணவர்களிடையே வேகமாக பரவி வருவதால், விடுமுறை அளிக்காமல் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆன்லைனில் பாடம் எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |